பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன்போது, பிரதி அமைச்சரினால் சான்றிதழ்கள், பரிசில்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல். அனீஸ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.