ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

🕔 October 3, 2015

Accident - Oluvil - 02

– எம்.ஐ.எம். நாளீர் –

லுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியின் குறுக்காக நின்ற – மாடு ஒன்றில் மோதியதையடுத்து, இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும், சைக்கிளின் பின்னால் இருந்தவரும் காயங்களுக்குள்ளாகினர்.

இதனையடுத்து, காயமடைந்தவர்களை, அவ் வழியாகப் பயணித்தோர் முச்சக்கர வண்டியில் ஏற்றி, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்படி இருவருக்கும், சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக, வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.Accident - Oluvil - 03Accident - Oluvil - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்