பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 March 29, 2019

பொலிஸார் தற்போது பயன்படுத்தும் காக்கி நிற ஆடையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, உரிய அதிகாரிகளுடன் – தான் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பார்வைகளை மாற்றும் பொருட்டும், தரமானதும், கௌரவம் மிக்கதுமான சேவையினை உருவாக்குவதற்காகவும்  அவர்களின் உடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொஸ்கம பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று வியாழ்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தினை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தமையினை அடுத்து, அதன் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்