சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம்
– தம்பி –
தானும் தன்னுடைய சகாக்களும் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பதை ‘செல்பி’ எடுத்து, அதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்ட, வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனின் செயற்பாடு குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன், தனது சகாக்களுடன் மதுபானம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறும், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விடயங்களை, அங்கிருந்து செய்தியாக வழங்கும் பொருட்டு, வீரகேசரியின் செலவில் ஜெனீவா சென்றிருந்த கஜன், அங்கு சாராயம் குடிப்பதை படம் எடுத்து வெளியிட்டுள்ளமை அருவருக்கத்தக்க விடயமாகும்.
அதுவும் தமிழில் மூத்த பத்திரிகையான வீரகேசரியின், ‘பிரதம ஆசிரியர்’ எனும் பதவியில் இருந்து கொண்டு, இவ்வாறு கஜன் நடந்து கொண்டுள்ளமை, அவர் சார்ந்த பத்திரிகைக்கு அவமானமாகும் என, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.
மது அருந்துகின்றமை போன்ற காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தவிர்த்து வரும் தற்போதைய காலகட்டத்தில், வீரகேசரியின் பிரதம ஆசிரியர் கஜன், மது அருந்தும் நிகழ்வை படமெடுத்து வெளியிட்டுள்ளமை – வெட்கக் கேடான செயற்பாடு எனவும், அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.