சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் ஜனாதிபதி அதிகாரபூர்வமாக பதிலளிக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்த போதிலும், தேசிய அரசாங்கம் அமைவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தொண்டமானையும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு தொண்டமான் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.