இரண்டு அமைச்சுக்களுக்கான செலவீனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தோல்வி

🕔 March 28, 2019

ள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுகளுக்கான செலவுகள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான செலவு மீதான வாக்கெடுப்பும் தோல்வியடைந்துள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பெருநகர  மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத் தலைப்புகள் எதிர்க் கட்சியினால் முற்றாக தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை அமைச்சர் வஜிர அபேவர்தனவின் உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 25க்கும் மேற்பட்ட  செலவுத் தலைப்புகள் தோற்கடிக்கப்பட்டன.

மேற்படி அமைச்சுகளுக்கான குழுநிலை விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது.

அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் முடிவடைந்ததும், அமைச்சுக்கள் மீதான செலவுத் தலைப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென சபாநாயகர் கோரினார்.

இந்த நிலையில் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 260 ஆவது செலவுத் தலைப்பின் மீது எதிர்க்கட்சி  உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வாக்கெடுப்பை கோரினார்.

வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் விவாதத்துக்கான அமைச்சுக்களின் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட மிகக் குறைந்த அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆளும் கட்சி தரப்பில் இருந்தனர்.

இதனை அடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் – உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 260 ஆவது செலவுத் தலைப்பிற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் பதிவாகி தோற்கடிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்