மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு
மருந்து கொள்வனவின் போது, மதகுருமாருக்கு 5 வீத விலைக்கழிவு வழங்குமாறு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 42ஆவது ஒசுசல கிளை, நேற்று திங்கட்கிழமை மாத்தளை நகரத்தின் நேற்று திறந்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினார்.
ஏற்கனவே 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 05 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் ராணுவத்தில் முன்னுரிமை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரச மருந்தகக் கூட்டுத்தபானம், 05 வீத விலைக்கழிவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, மதகுருமாறுக்கும் விலைக்கழிவு வழங்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.