பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நூற்றுக்கு 51 வீத வாக்குகள் பெறப்பட வேண்டும். அந்த பெரும்பாண்மையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரேயொரு கட்சியாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவே காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் அதன் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமிக்கப்பட வேண்டும் என சுதந்திர கட்சி தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, மேற்படி நிலைப்பாட்டை சுசில் வெளியிட்டுள்ளார்.