அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள்
– அஹமட் –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வசம் தற்போதுள்ள அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்களே, அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாட் பதியுதீன் வசம் ஏற்கனவே, கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கள் இருந்த நிலையிலேயே, புதிதாக இரண்டு அமைச்சுக்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வசம் இருந்த அமைச்சுக்களே, தற்போது அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.