சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

🕔 October 1, 2015

Hakeem - 098
– அஸ்ரப் ஏ. சமத் –

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் –  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று  நடைபெற்றது.

உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர் ஹக்கீமுடன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான், டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், கல்முனை பிரதி மேயர் ஏ.எல். அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ. பஸீர், ஏ. நசார்தீன், அமைச்சரின் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்ஸுர் மற்றும் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சா் பைசா் முஸ்தபா கூறினார்.

கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சாய்ந்தமருது பிரதேச சபையினை உருவாக்கித் தருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்