கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

🕔 March 15, 2019

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி, முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

‘ட்ரூ முஸ்லிம்’ என்ற  வட்ஸ்அப் குழுமத்தை நடத்தி வருவதாகச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹமட் என்ற நபரே, இந்த பொய் மற்றும் அவதூறு பிரசாரத்தை பரப்பி வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளையைச் சேர்ந்த மஹிந்த சார்பு   கும்பல் ஒன்றே இந்த அவதூறு பிரசாரங்களின்  பின்னணியில் இருந்து செயற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பாதாள உலகத்துடன் தன்னை தொடர்பு படுத்தி பரப்பப்பட்ட இந்த  அவதூறு பிரசாரத்தின் மூலமாக, தன்னை ஏனைய குழுக்கள் இலக்கு வைப்பதற்கு சந்தா்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும்,  தனக்கு  மரண அச்சுறுத்தல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு குறித்த  அரசியல் சக்திகள் திட்டமிட்டே இந்த பிரசாரத்தை பரப்பி வந்ததாகவும், முஜீபுர் றஹ்மான்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடொன்றை அண்மையில் பதிவு செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்