பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம்
நியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 09பேர் பலியாகி உள்ளனர்.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியினர் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது ராணுவ உடைபோல் அணிந்து வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ள்ளிவாசலில் சுமார் 300 பேர் வரை இருந்துள்ளனர். இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்களில் ஒருவர் கைதாகி உள்ளதாகவும், இன்னொருவர் இன்னும் அதே பகுதியில் சுற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர் ஒருவர் தெரிவிக்கையில்; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வெள்ளையர் என்றும், அவர் 30 அல்லது 40 வயதுடையவராக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த பள்ளிவாசலுக்கு வெளியில் இருக்கும் கார் ஒன்றில் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறன. இதனால் தற்போது அந்த மத்திய பகுதியில் இருந்து மக்களை பொலிஸார் வெளியேற்றி வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் மூலம் சந்தேகநபர் தேடப்படுகிறார்.
வீடியோ