அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ்

🕔 March 15, 2019

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருடத்துக்கான வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களின் கருத்துக்களைப் பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள – மக்களுடனான கலந்துரையாடல்கள், அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறும் என்று, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

அறபா வட்டாரத்துக்குரிய – மக்களுடனான கலந்துரையாடலை, வேறு வட்டாரமொன்றிலுள்ள பாடசலையில், இன்று வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ‘உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் செயலாளர் நடந்து கொள்கிறார்’ என குற்றம்சாட்டது.

இந்த குற்றச்சாட்டினை வெளிப்படுத்தும் செய்தியொன்றினை நேற்றிரவு ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடல், வேறு வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அழைப்புக்கடிதம் தயாரிக்கப்பட்டமை, தவறுதலாக நடைபெற்றதொரு விடயம் என்றும், அந்தத் தவறு தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும், செயலாளர் பாயிஸ் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் அறபா வட்டாரத்துக்குரிய மக்களுடனான கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, அதே வட்டாரத்திலுள்ள அந்நூர் வித்தியாலயத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் பாயிஸ் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்