இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

🕔 October 1, 2015

MOH + Arafa - 02
– முன்ஸிப் –

‘இதயத்தைப் பாதுகாத்து, இதமாக வாழ்வோம்’ எனும் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் இணைந்து, இந்த ஊர்வலத்தினை நடத்தின.

உலக இருதய தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் எம்.ஏ. ஜௌபர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம். முனவ்வர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரியும், அறபா வித்தியாலய அதிபருமான எம்.ஏ.சி. கஸ்ஸாலி அதிதியாகக் கலந்து கொண்டார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில், சுகாதாரம் மற்றும் இருதய நலனை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன.

மேலும், இதயத்தைப் பாதுகாத்தல் தொடர்பிலான துண்டுப் பிரசுரங்களை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர், பொதுமக்களுக்கு விநியோகித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.MOH + Arafa - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்