சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம்

🕔 March 14, 2019
– எ.எம்.றிசாத்-
சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி, முசலி  பிரதேச சபையின் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 ஆவது அமர்வில் தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயமாக அரச உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்றைய சபை அமர்வு முடிவடைந்ததும் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள் அனைவரும் போராட்ட களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியதுடன் போராட்டச் செலவுக்காக சிறு தொகைப் பணத்தையும் கொடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்