தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார்
– எம்.வை. அமீர் –
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித், மலேசியாவில் ‘மனேஜ்மன்ட் அன்ட சயின்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது, இவருக்கான கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.
கணணி விஞ்ஞானத்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும், பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் இவர் சமர்ப்பித்துள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்திலும் அல் மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லுரியிலும் இவர் பெற்றுக்கொண்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில், கணணி விஞ்ஞான இளமானிப்பட்டத்தையும் (Bsc), இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுமாணிப்பட்டத்தையும் (Msc) இவர் பெற்றுள்ளார்.