சிறையில் ஊழியம் செய்யும் ஞானசார தேரர் : ஆங்கில ஊடகம் தெரிவிப்பு
ஞானசார தேரர் சிறைச்சாலையில் தற்போது ஊழியம் செய்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரர், சிறுநீரக நோய் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அங்கு ஊழியம் செய்வதற்கும் பணிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, இவர் தனது கடூழிய சிறைத்தண்டனைக்கான ஊழியத்தை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது அவர் ஊழியம் செய்து வருவதாகவும், குறித்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.