முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்
கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாககவும், அவ்வாறு கைது செய்வதற்கு தடைவிதிக்குமாறும் கோரி, வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு, அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய, இன்று திங்கட்கிழமை காலை – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வசந்த கருணாகொட வந்திருந்தார்.