மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு

🕔 March 11, 2019

மொரட்டுவ – ராவத்தாவத்தையில் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை, பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமா எனப்படும் கெலும் இந்திக சம்பத் என்பவரின் வீட்டில் இருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ரி- 56 ரக துப்பாக்கிக்கான 3000 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாக்கந்துர மதுஷ் நடத்திய – ரத்தினக்கல் கொள்ளையில் ஈடுபட்டவரே மேற்படி கெலுமா ஆவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்