மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம்

🕔 March 10, 2019

– அஹமட்-

ம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், பாலமுனையில் சில நாட்களுக்கு முன்னர் – மரணம் சம்பவித்த வீடொன்றுக்குச் சென்ற போது, அந்த வீட்டுக்காரர்களால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது.

அம்பாறை மாவட்டத்துக்கு எப்போதாவது இருந்திருந்து விட்டு வருகின்ற மு.கா. தலைவர் ஹக்கீமை, அந்த மாவட்டத்திலுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் பிரதேசத்திலுள்ள மரண வீடுகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாகும்.

அரசியல் லாபம் கருதி, ஹக்கீமும் அவ்வாறு அழைக்கப்படும் மரண வீடுகளுக்குச் செல்வதுண்டு.

இது போலவே, நேற்று சனிக்கிழமை பாலமுனையிலுள்ள மரண வீடொன்றுக்கு, அப்பிரதேச மு.காங்கிரஸ் முக்கியஸ்தர்களால் அமைச்சர் ஹக்கீம் அழைத்துச் செல்லப்பட்ட போது, குறித்த மரண வீட்டுக்காரர்கள் ஹக்கீமை உள்ளே அனுமதியாமல் திருப்பி அமைப்பியதாகத் தெரிய வருகிறது.

இத்தனைக்கும், மரண வீட்டுக்காரர்கள் மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால், மு.கா. தலைவரை ஏன் மரண வீட்டார் திருப்பியனுப்பினார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?

மரண வீட்டுக்கு ஹக்கீம் சென்ற போது, மு.கா. வட்டார முக்கியஸ்தர் ஒருவர், அங்கு அவரை வரவேற்கும் பொருட்டு, மாலையும் கையுமாக நின்றிருந்தாராம்.

அதனைக் கண்ட மரண வீட்டாருக்கு வந்த ஆத்திரத்தில்தான், ஹக்கீமை திருப்பியனுப்பியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

பாலமுனையில் நேற்றைய தினம் வேறொரு மரண வீட்டுக்கும் ஹக்கீம் சென்றிருந்தார் என்பதும், அதனைப் படம் பிடித்து, மு.கா. தலைவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்