பரீட்சை திகதியில் மாற்றம்
– அஸ்ரப் ஏ. சமத் –
அகில இலங்கை அஹதியா சம்மேளனத்தினால் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடு முழுவதிலும் நடத்தப்படவிருந்த இடைநிலைப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அஹதியா சம்மேளத்தின் செயலாளா் எஸ்.எம். சாதிலி தெரிவித்துள்ளாா்.
ஹஜ் ஜூப் பெருநாள் தினத்துக்கு மறுதினமான வெள்ளிக்கிழமையன்று, முஸ்லிம் பாடாசலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இத்தினத்துக்குப் பதிலாக ஒக்டோபர் 03ஆம் திகதி சனிக்கிழமை பாடாசலைகளை நடத்தும்படி கல்வியமைச்சு அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே, அஹதியா பரீட்சையை ஒக்டோபர் 03 ஆம் திகதி நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
ஆகவே, எதிா்வரும் அக்டோபா் 24 ஆம் திகதியன்று, மேற்படி அஹதியா பரீட்சையை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சம்மேளத்தின் செயலாளா் சாதிலி மேலும் தெரிவித்தார்.