கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர்
– மப்றூக் –
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் பலியான, குறித்த பஸ்ஸின் நடத்துநர் பாலமுனையை சொந்த இடமாகக் கொண்ட முகம்மது காசிம் சாபிர் எனத் தெரியவருகிறது.
23 வயதுடைய இவர் – அக்கரைப்பற்றில் திருமணம் செய்துள்ளார்.
212 பேருடன் நேற்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்கள் பயணித்த நிலையில், அவற்றில் ஒரு பஸ் – கடுகண்ணாவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், மின் கம்பத்துடன் பஸ் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது குறித்த பஸ் நடத்துநர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்தனர். இவர்களில் விரிவுரையாளர்களும் சாரதியும் அடங்குவர்.
காயமடைந்தவர்கள் மாவனல்லை, கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்