ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது

🕔 March 3, 2019

டூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருடங்களை 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி இந்த தீர்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தை  அவமதித்தமை, சிரேஷ்ட சட்டவாதியை அவமதித்தமை, நீதிமன்ற கட்டளைக்கு அடிபணியாமை, சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய 04 குற்றங்களை இவர் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மேற்படி தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணதிலக்க ஆகியோர் இந்தத் தீர்ப்பினை வழங்கியிருந்தனர்.

கடந்த சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படிடையில் ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் விடுதலையாகவில்லை.

இந்த நிலையிலேயே, ஞானசாரர தேரர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை விடுவிக்கப்படவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்