இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

🕔 March 1, 2019

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அபிநந்தன் நாடு திரும்பியதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

9:35 PM: அபிநந்தன் வருகையையடுத்து அமிர்தசரஸ் துணை பொலிஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் அபிநந்தன் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர்; “அபிநந்தன் ஏதும் பேசவில்லை. புன்னகைத்தார். அவ்வளவுதான். நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என்றார். அவர் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது” என்றார்

“வாகா எல்லைக் கதவுகள் பொதுவாக மாலை 06 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று அபிநந்தனின் வருகைக்காக இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. அவரை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்” என்றும் துளர் சிங் திலோன் கூறினார்.

விமானம் மூலம் அபிநந்தன் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் திலோன் குறிப்பிட்டார்.

அபிநந்தனை விடுவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

9:30 PM: அபிநந்தனை ஒப்படைக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் ஆர் ஜி கே கபூர், “பாகிஸ்தான் அவரை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

9:28 PM: அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அபிநத்தன் பேசும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.யிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பு வழக்கம் போல் தங்களது நிகழ்ச்சியை நடத்தியதாக பிபிசி உருது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

5:20 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

5:00 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன் அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ வாகனங்கள் இந்தியாவின் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4:40 PM: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் வாகனங்கள் வாகா எல்லையை வந்தடைந்துள்ளன. இருப்பினும், அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளாரா என்று தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்