கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்
கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சியின் செயற்குழு கூடியபோது வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் என்னவென வினவிய போதே, இந்தப் பதிலை வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கொக்கைன் பாவிக்கின்றனர் என்று நான் தெரிவித்திருந்தேன். அது தொடர்பில் பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர். என்னை விமர்சிப்பதில் பயனில்லை. அவர்கள் இந்த போதைப்பொருளை பாவிப்பதில்லை என்றால், ரத்த பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தினால் பிரச்சினை முடிந்துவிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.