அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

🕔 February 28, 2019

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார்.

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்; “அட்டாளைச்சேனையிலுள்ள மக்கள் விரும்பினால் மட்டுமே, அதனை நகர சபையாக்குவேன்” என்று தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை மக்களும், அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் விரும்பினால், தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இந்த விடயத்தை அட்டாளைச்சேனையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சவையின் தவிசாளர் ஆகியோரிடமும், தான் கூறியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ், அதிர்வு நிகழ்சியில் குறிப்பிட்டார்.

ஒரு பிரதேச சபையை நகர சபையாக்குவதற்கு, தனது அமைச்சுக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாகவும் ஹரீஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்திகள்:

01) அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

02) அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 32 நாட்கள்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்