சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

🕔 February 26, 2019

லங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.

சர்வதேச கிறிச்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான இரண்டு ஒழுங்கு விதிகளை மீறியமையினை, அவர் ஒப்புக் கொண்டமையினை அடுத்து, இந்த தடை விதக்கிப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் மறுப்பு தெரிவித்துள்ளமையே, மேற்படி விதி மீறல்கள் எனக் கூறப்படுகிறது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையின் மூலம், 2021 ஆண்டு வரையில் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையிலும், சனத் ஜயசூரிய ஈடுப்பட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்