போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்
– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் –
கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக சென்று தெளிவுட்டும் செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
புகைத்தல், போதைப் பொருள் ஒழிப்பு செயலணியின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியின் நிர்வாகிகளான உலமாக்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், அரசாங்கா சார் திணைக்களங்களின் பிரதிநிதிகள், சமுக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் ஈடுபட்டனர்.
இதன் போது வர்த்தக நிலையங்களுக்கு புகைத்தலுக்கு எதிரான துண்டுபிரசுரங்கள் விநியோககிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டன. மேலும் புகைத்தல் எதிர்ப்பு விழிப்பூட்டல் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.