போதைப் பொருள் குற்றவாளிகளின், தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி தீர்மானித்தார்
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவிக்கின்றார்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தண்டனை பெறவிருப்போரின் பெயர்ப்பட்டியலும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்ற போதும் , அதனை நிறைவேற்றும் திகதியை ஜனாதிபதியே தீர்மானித்து கையொப்பமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
1976ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.