கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆஜனரானார்.
மேற்படி குற்றச்சாட்டினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மூன்று பேரைக் கொண்ட குழுவொன்றினை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்தார்.
இந்தக் குழுவினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று தம்முன் ஆஜராகுமாறு, நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.
தொடர்பான செய்தி: அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு