அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா
🕔 September 28, 2015



– முன்ஸிப் –
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தரம் 03, தரம் 04 மற்றும் தரம் 05 எனும் பிரிவுகளில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
போட்டிகளில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தரம் 03 பிரிவில் ஒலுவில் ஜாயிஸா வித்தியாலயமும், தரம் 04 பிரிவில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும், தரம் 05 பிரிவில் அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயமும் முதலிடங்களை வெற்றி கொண்டன.
பரிசளிப்பு வைபவத்தில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்குமான சான்றிதழ்களையும், வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.


Comments



