தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

🕔 February 21, 2019

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தனது ஆதரவாளர்களை, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் காரியாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களிடம் பேசிய உதுமாலெப்பை; தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில், மூன்றாவது பதவி நிலையில் இருந்த உதுமாலெப்பைக்கு எதிராக, கட்சியின் கனிஷ்ட அங்கத்தவர்கள் சிலர் செயற்பட்ட போதும், அதனை தலைவர் அதாஉல்லா கண்டும் காணாமல் இருந்ததாக உதுமாலெப்பை தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இதன் பின்னர், 30 மில்லியன் ரூபா பணத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனிடம் உதுமாலெப்பை பெற்றுக் கொண்டு, கட்சி மாற முயற்சிப்பதாக, அமைச்சர் அதாஉல்லா கூறியிருந்தார்.

அதாஉல்லாவின் இந்தக் குற்றச்சாட்டினை ஜீரணிக்க முடியாமை காரணமாகவே, தேசிய காங்கிரஸிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்ததாக உதுமாலெப்பை நேற்று தெரிவித்திருந்தார்.

தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் உதுமாலெப்பையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தொடர்பான செய்தி: காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்