பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

🕔 February 21, 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள நூற்றாண்டுகள் பழமையான குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயிரிழப்புகள் அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்படி குடியிருப்புப் பகுதியில் ரசாயனக் களஞ்சியசாலையொன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

“56 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று, தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகியவற்றின் பணிப்பாளர் ஜுல்பிகார் ரஹ்மான் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்

பங்களாதேஷில் கட்டடங்கள் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள், மிகவும் அரிதாகவே பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்