போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

🕔 February 20, 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தன்னை வெள்ளிக்கிழமை, தம் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் இன்று புதன்கிழமை பாரிய சர்ச்சை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது தொடர்பில் விசாரிப்பதற்காக குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார்.

மேற்படி குழுவே, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை தம் முன்னிலையில் ஆஜராகுமாறு கோரியுள்ளது.

தொடர்பான செய்தி: போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்