சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

🕔 September 28, 2015

Child abuse pro - 03
– க. கிஷாந்தன் –

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார் விளக்கங்களை வழங்கியதோடு, சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுப்பது தொடர்பிலும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், மேற் கூறப்பட்ட விடயங்களை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட , சிறிய வடிவிலான புத்தகமொன்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.  Child abuse pro - 02Child abuse pro - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்