மதுஷுக்கும் எனது குடும்பத்தவர்களும், எவ்வித தொடர்பும் கிடையாது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

🕔 February 12, 2019

போதைப் பொருள் கடத்தல் வியாபாரி மாகந்துர மதூஷுடன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன  முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“பாதாள குழு தலைவன் மதுஷ் – மாகந்துர பிரதேசத்தை சேர்ந்தவன் என்று  சமூக வலைத்தளங்களில்  குறிப்பிடப்படுகின்றது. அது தவறு. மதுஷ் கம்பறுபிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

இவ் விடயத்தில் என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்புபடுத்தி அரசியல் தூற்றுதல்கள் இடம்பெறுகின்றன. எனது பிள்ளைகள் பாதாள குழுவினருடன் தொர்புகொள்வதற்கான எவ்விதமான அவசியமும் கிடையாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்