அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம்

🕔 February 12, 2019

லுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது.

இலங்கைப் பிரஜைகளான ஆண்களிடம் மட்டுமிருந்து, அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிப்போர் – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுளுக்கு மேற்படாத தடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு, அவற்றில் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருந்தல் அவசியமாகும்.

குறித்த அலுகோசு பதவிக்குத் தெரிவு செய்யப்படுவோர் அவர்களின் உள மற்றும் மன திடத்தை அளவிட்டுப் பார்ப்பதற்காக, தேசிய வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற பரிசோதனையில் சித்தி பெறவேண்டும்.

மேலும், குறித்த பதவிக்குத் தெரிவு செய்யப்படுவோர், மிகச் சிறந்த உள மற்றும் மனோதிடம் இருப்பதை, அரசினால் பதிவு செய்யப்பட்ட மனநல வைத்தியரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்