பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ

🕔 February 12, 2019

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவரல்லாத ஒருவருக்காக, பொதுஜன பெரமுன பிரசாரம் செய்யாது என்றும், ஆதரவு வழங்காது எனவும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உள்ளன. பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ள சில கட்சிகள், பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துடன் பேசாமல், தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவித்துள்ள” என்று, இதன்போது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அங்கத்தவரல்லாத எவருக்காகவும் பிரசாரம் செய்வதற்கு, நாங்கள் தயாரில்லை” என்றும் அவர்கள் இதன்போது கூறினர்.

இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ; எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர், பொதுஜன பெரமுன சார்பாக, தாமரை சின்னத்திலேயே களமிறக்கப்படுவார் என்று உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்