பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு

🕔 February 11, 2019

ரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோல் 06 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை டீசல் 04 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருளுக்கான உலக சந்தையின் விலை நிலவரப்படி, அவற்றின் புதிய விலைகளை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை நிதி அமைச்சில், எரிபொருள் விலை நிர்ணயக் குழு ஒன்று கூடியிருந்தது.

புதிய விலைக்கு அமைய 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றரொன்றின் புதிய விலை 129 ரூபாவாகும். ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 152 ரூபாவாகும்.

இதேவேளை டீசலின் புதிய விலை 103 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 126 ரூபா என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்பு செய்தி: எரிபொருள்களுக்கான விலையில் இன்று மாற்றம்: அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்