வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

🕔 February 11, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரின் தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவுவுக்கு அருங்காட்சியகம் மற்றும் நினைவுத்தூபி அமைப்பதற்காக, அரசாங்கத்தின் பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக, கோட்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகத்துக்கான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து, தனது எதிர்ப்பு மனுவை கோட்டா தாக்கல் செய்திருந்தார்.

பொது மக்களின் 33.9 மில்லின் ரூபா நிதியை மோசடியாகப் பயன்படுத்தி மெதமுலனவில் டீ.ஏ. ராஜபக்‌ஷ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை அமைத்தமை தொடர்பில், கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோடட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம், தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்