எரிபொருள்களுக்கான விலையில் இன்று மாற்றம்: அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
எரிபொருளுக்கான விலையில் இன்று திங்கட்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்திய எரிபொருளுக்கான சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதத்தின் 10ஆம் திகதியிலும், எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் பெற்றோல் வகைகளுக்கும் டீசலுக்கும் 02 ரூபாயும், சுப்பர் டீசருக்கும் 03 ரூபாயும் விலை குறைக்கப்பட்டிருந்தன.
அப்போது சர்வதேச சந்தையில் ஒரு பரல் மசகு எண்ணைக்கான விலை 59 டொலர்களாகக் காணப்பட்டது.
ஆனால், தற்போது 62 டொலர்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.