ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம

🕔 February 9, 2019

ன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷஇணக்கம் தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமை முற்றிலும் பொய்யானதாகும் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  தாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும், பொதுஜன பெரமுன முன்னணி ஆகியவற்றில் நிலவுகின்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவரது சகோதரர்கள்  ஆட்சிக்கு வர முயற்சிப்பது குடும்ப ஆட்வியினையே ஏற்படுத்தும். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்,ஷ தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார் என்று குறிப்பிட்டுள்ளமையானது அவரது தனிபட்ட தீர்மானமாகும். இவருக்கும் எமது கட்சிக்கும் எவ்விதமாக தொடர்புகளும் கிடையாது” என்றும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்