நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள், திரவப் பொருட்களைக் கொண்டு வரத் தடை

🕔 February 9, 2019

நீர் உட்பட எந்தவிதமான திரவப்பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என, அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் தடை ஏற்புடையதாகும்.

பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

“நீர் உட்பட எந்தவிதமான திரவப் பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் கொண்டு வருவதற்கான தேவையில்லை” என்றுகூறிய அந்த அதிகாரி; “சுடுநீர் உட்பட எல்லாமே இங்கு உள்ளது” என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபைக்குள் கடந்த வருடம் மிளகாய்த்தூள் கலந்த திரவம் வீசப்பட்டமையுடன் தொடர்புபடுத்தி, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி, ஊடகமொன்றுக்கு மேலும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்