கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு

🕔 February 8, 2019
கிரலாகல தூபியில் ஏறி படம் எடுத்தார்கள் எனும் குற்றத்துக்குள்ளான தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரையும் விடுவிப்பதற்காக  பாடுப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட  மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தங்களின் மேற்படி விடயத்தில்  உதவிகளை செய்தமைக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இரவு மாணவர்களும் பெற்றோரும் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்தனர்.

தங்களை விடுவிப்பதற்காக உதவிய அமைச்சருக்கு மாத்திரமன்றி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டப்பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி சப்ராஸ் அபூபக்கர் ஆகியோருக்கும் அவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களை பார்வையிட அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்