ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு

🕔 February 8, 2019

நாடாளுமன்றத்திலுள்ள பாரம் தூக்கிகளில் (லிஃப்ட்) 06 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள ‘லிஃப்ட்’ இல், சென்ற உறுப்பினர்கள், அதில் நேற்றைய தினம் சிக்கிக் கொண்டமையை அடுத்தே, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த  ‘லிஃப்ட்’ இல், நேற்று ஒரே நேரத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தமையினால், அதில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உபயோகிக்கும் ‘லிஃப்ட்’ களில் 06 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் பதாதைகள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்