யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு

🕔 September 27, 2015
Jaffna muslims - 02
– பாறுக் ஷிஹான் –

யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்’ எனும் பெயரிலான முஸ்லிம் கலாச்சார நிகழ்வு, நேற்று முன்தினமும், நேற்று சனிக்கிழமையும் – இரண்டு நாட்கள், ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வினை, வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், யாழ் முஸ்லீம் சிவில் சமூகமும் இணைந்து நடத்தியது.

மேற்படி நிகழ்வில், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த. குருகுலராஜா, வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மீன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மாணவர் நிகழ்ச்சிகள், அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுவாரசியமான அம்சங்கள் இதன்போது இடம்பெற்றன.

இங்கு மூத்த எழுத்தாளர்களுக்கான கௌரவிப்புகள் நடைபெற்றன. இதில் பிரபல ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ. லாபீர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Jaffna muslims - 04Jaffna muslims - 03Jaffna muslims - 05Jaffna muslims - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்