04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது
கேரள கஞ்சா 400 கிலோ கிராமுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது, சந்தேகநபர்களை – திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 04 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.