தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம்

🕔 February 7, 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றை,  ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்தார்.

குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்று 07ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அதனை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்று ஐ.தே.கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனைக்கு அந்தக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர், எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்னர்.

இந்த நிலையில், மு.காங்கிரசை இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் தேசிய அரசாங்கத்தை, தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்