தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி

🕔 February 6, 2019

மு.காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்தாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையை தான் ஒருபோதும் அதிகரிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் தேசிய அரசாங்கத்தை ஜனாதிபதி அங்கீகரிக்க மாட்டார் என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரிக்க மாட்டார் என்றும், ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிக்கு ஆதரவு வழங்கும் தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை ஜனநாயக விரோதமாக அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, மேலும் அமைச்சர்கள் ஏன் தேவைப்படுகின்றனர் எனவும் சரவணபவன் கேள்வி எழுப்பியதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்