அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என்று கோரி, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
சுதந்திரக் கட்சியை மீளமைக்கும் மாநாடு அனுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே மேற்படி பிரேரணையை துமிந்த திஸாநாயக்க கொண்டு வந்தார்.
இந்த பிரேரணைக்கு ஏகமனதான ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.